சிங்கக்குட்டிகள் பட்டினி கிடக்கும்

சிங்கக்குட்டிகள் பட்டினி கிடக்கும்
ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே!
குறையில்லையே, குறையில்லையே
ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே!

1. புல்லுள்ள இடங்களிலே என்னை மேய்க்கின்றார்!
தண்ணீரண்டை கூட்டிச் சென்று தாகம் தீர்க்கின்றார்! – சிங்கக்

2. எதிரிகள் முன் விருந்தொன்றை ஆயத்தப்படுத்துகிறார்!
என் தலையை எண்ணெயினால் அபிஷேகம் செய்கின்றார்!- சிங்கக்

3. ஆத்துமாவை தேற்றுகின்றார் ஆவி பொழிகின்றார்!
ஜீவனுள்ள நாட்களெல்லாம் கிருபை என்னைத் தொடரும்!- சிங்கக்

4. என் தேவன் தம்முடைய மகிமை செல்வத்தினால்
குறைகளையே கிறிஸ்துவுக்குள் நிறைவாக்கி நடத்திடுவார்!- சிங்கக்



singkakkuttikal pattini kidakkum

singkakkuttikal pattini kidakkum
aantavaraith theduvorkku kuraiyillaiye!
kuraiyillaiye, kuraiyillaiye
aantavaraith theduvorkku kuraiyillaiye!

1. pullulla itangkalile ennai meykkinrar!
dhanneerandai kuttis sendru thakam dheerkkinrar! – singkak

2. ethirikal mun virunththondrai aayathdhabpaduththukirar!
en dhalaiyai enneyinal abishakem seykinrar!- singkak

3. aaththumavai therrukinrar aavi pozhikinrar!
jeevanulla nadkalellam kirubai ennaith thodarum!- singkak

4. en thevan dhammudaiya makimai selvaththinal
kuraikalaiye kiristhuvukkul niraivakki nadaththiduvar!- singkak